

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந் திர உதவித் தொகை வழங்கக்கோரி வரும் 25-ம் தேதி, திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த, அனைத்து மாற் றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைக்கான சங்க மாநாட் டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக் கான சங்கத்தின் ஒன்றிய அள விலான மாநாடு நேற்று நடை பெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஹரிகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்தார். கடந்த பிப்ர வரியில் விண்ணப்பித்தோர் மற்றும் தற்போது புதிதாக விண் ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி களுக்கு உடனே மாதாந்திர உதவித்தொகை வழங்கக் கோரி, வரும் 25-ம் தேதி திருப் போரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஒன்றியத்தின் புதிய நிர்வாக குழு தேர்வு செய் யப்பட்டது. இதில், மாநில துணை செயலாளர் பாரதி அண்ணா, துணைத் தலைவர் அன்பு, ஒன்றிய செயலாளர் அருள்ராணி, தலைவர் அன்பரசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.