Published : 10 Sep 2020 07:33 AM
Last Updated : 10 Sep 2020 07:33 AM

இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக பிரபாகர் பொறுப்பேற்பு

இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக சு.பிரபாகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி, வருவாய் நிர்வாக ஆணையராக கடந்தசில மாதத்துக்கு முன் மாற்றப்பட்டார்.

இருப்பினும் புதிய ஆணையர்நியமிக்காததால், அந்த பொறுப்பையும் பணீந்திர ரெட்டியே கூடுதலாக கவனித்து வந்தார். மேலும்,கரோனா தடுப்பு பணிகளையும் அவர் மேற்கொண்டுவந்த நிலையில், புதிய ஆணையரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த சு.பிரபாகர் இடமாற்றம் செய்யப்பட்டு, சமீபத்தில் அறநிலையத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் நேற்று ஆணையராக இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x