

ஆவடியில் உள்ள போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (சிவிஆர்டிஇ) இயக்குநர் பி.சிவக்குமாருக்கு முதன்மை விஞ்ஞானியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் அதநவீன ஊர்திகளையும், அவற்றின் உதிரிபாகங்களையும் வடிவமைத்து உருவாக்கியதற்காக அவருக்கு இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அர்ஜூன் எம்பிடி மார்க்-2, தொலைதூர தாக்கும் திறன் கொண்டு அர்ஜூன் கேட்புல்ட், சிசிபிடி எனும் செய்தி தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு வாகனம், பாலம் தாங்கும் பிஎல்டி கவச வாகனம், இலகுரகப் போர் விமானத்தின் சுழல் தாங்கிகள் (பேரிங்க்ஸ்) உள்ளிட்டவை சிவக்குமாரின் திட்டப் பணிகளில் தயாரிக்கப்பட்ட முக்கிய போர் தளவாடங்கள் ஆகும்.
போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.