Last Updated : 09 Sep, 2020 08:20 PM

 

Published : 09 Sep 2020 08:20 PM
Last Updated : 09 Sep 2020 08:20 PM

நெல்லையில் கரோனா ஊரடங்கு விதிமீறல்: ரூ.2.24 லட்சம் அபராதம் விதிப்பு- மாநகராட்சி ஆணையர் தகவல்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களிடம் இதுவரை ரூ.2.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் விதமாகவும் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகர் பகுதிகளில் பாதுகாப்பு முகக்கவசம் பயன்படுத்தாத நபர்கள், சிறு, குறு வணிக நிறுவனங்களில் பாதுகாப்பு முகக்கவசம் இன்றி பணிபுரியும் பணியாளர்கள், விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களை கண்காணிக்கும் பொருட்டு மாநகராட்சி பணியாளர்களால் உருவாக்கப்பட்ட 4 கண்காணிப்புக்குழு மற்றும் சிறப்பு ஆய்வுக்குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

கடந்த 4-9-2020 அன்று பிறப்பித்த தமிழக அரசின் ஆணையின்படி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகளை மீறுவோர்க்கு ரூ.500ம், பாதுகாப்பு முகக்கவசம் அணியும் நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு ரூ 200ம், பொது இடங்களில் எச்சில் துப்புதலை கண்டறிந்தால் ரூ.500ம், பொது இடங்களில் சமூக இடைவெளி நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு ரூ500ம், சிகை அலங்காரம் மற்றும் அழகு நிலையங்கள் , உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழிகாட்டும் நடைமுறைகளை மீறுவோர்க்கு ரூ5000ம், பாதுகாக்கப்பட்ட மண்டல பகுதிகளில் வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றாத தனிநபராக இருந்தால் ரூ500ம், வாகனம் மற்றும் வணிக நிறுவனங்களாக இருந்தால் ரூ5000ம் அபராதாக வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

அதன்படி திருநெல்வேலி மாநகராட்சிபகுதிகளுக்குட்பட்ட 4 மண்டல பகுதிகளில் கண்ணகாணிப்பு குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் போது பாதுகாப்பு முகக்கவசம் பயன்படுத்தாத மற்றும் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றாத 561 நபர்களிடமிருந்து சிறு, குறு வணிக நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. 1812 எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் நடவடிக்கையாக ரூ 2.24 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்பு முகக்கவசத்தை பொதுமக்கள் , வணிக நிறுவனங்கள், தொடர்ந்து பயன்படுத்தி பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x