அக்டோபர் 2 வரை ‘முத்ரா’ திட்டத்தின் கீழ் 25 லட்சம் பேருக்கு வங்கிக் கடன் வழங்க திட்டம்: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல்

அக்டோபர் 2 வரை ‘முத்ரா’ திட்டத்தின் கீழ் 25 லட்சம் பேருக்கு வங்கிக் கடன் வழங்க திட்டம்: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல்
Updated on
2 min read

‘பிரதம மந்திரி முத்ரா யோஜனா’ திட்டத்தின்கீழ், 25 லட்சம் பேருக்கு வங்கிக் கடன் வழங்க திட்டமிடப் பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

சென்னையில் ‘பிரதம மந்திரி முத்ரா யோஜனா’ திட்டத்தின்கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சுயஉதவிக்குழு பெண்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந் தது. முன்னணி தேசிய வங்கி கள் சார்பில் கடனுதவி வழங்கப்பட்டன.

கடன் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கடனு தவி வழங்குவதற்காக முத்ரா கடனுதவி திட்டம், கடந்த ஏப்ரலில் தொடங்கப்பட்டது. இதற்காக, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் 25 லட்சம் பேருக்கு கடன் உதவி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பெரிய நிறுவனங்களால்தான் அதிக வேலைவாய்ப்பு வழங்க முடி யும் என மக்கள் கருதுகின்றனர். உண்மையில், பெரிய நிறுவனங்கள் 1.25 கோடி பேருக்குத்தான் வேலைவாய்ப்பு அளித்துள்ளது. ஆனால், சிறிய நிறுவனங்கள் மூலம் 12 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

முத்ரா திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ.20 ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளது. இதில், ரூ.3 ஆயிரம் கோடி குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க பட்ஜெட்டில் ஒதுக்கப் பட்டுள்ளது. முத்ரா கடன் குறித்த தகவல்களைப் பெற இலவச தொலைபேசி எண்கள் அறிமுகப் படுத்தவும், இதற்கான விண்ணப்ப படிவங்களை பிராந்திய மொழி யில் அச்சடித்து வழங்கவும் வங்கி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.10 லட்சம் வரை கடன் பெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பிணையத் தொகை வசூலிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

வங்கி அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வெளியே அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட் டது. இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர் டி.டி.பிராங்கோ ராஜேந்திர தேவ் கூறியதாவது:

பல ஆண்டுகள் போராட்டத் துக்குப் பிறகு வங்கிகளுக்கு 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை கிடைத்துள்ளது. இந்நிலையில், விடுமுறை நாளான இன்று (நேற்று) கடன் வழங்கும் நிகழ்ச்சியை வைத்து அனைத்து ஊழியர்களையும் வரவழைத்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக புதிய நியமனங்கள் இல்லாததால் பணி யாளர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு வங்கியும் குறைந்த காலத்தில் 25 பேருக்கு கடன்களை வழங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறது. கடன் பெறுபவர்களின் மனுவை முறையாக பரிசீலிக்கவில்லை எனில் சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரி தண்டிக்கப்படுகிறார். மேலும், கடன் பெறுபவர்களின் வி்ண்ணப்பங்களை முறையாக பரிசீலிக்காமல் அவசர அவசரமாக கடன் வழங்குவதால் அவற்றை திரும்ப வசூல் செய்வதிலும் பிரச்சினை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in