Published : 09 Sep 2020 09:34 AM
Last Updated : 09 Sep 2020 09:34 AM

காஸ் சிலிண்டர் மானியம் படிப்படியாக குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதால், நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய மத்திய அரசு நுகர்வோரிடம் இருந்து சிலிண்டருக்கான முழு கட்டணத்தையும் வசூலித்து விட்டு, பின்னர் அதற்கான மானியத்தை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மானியத் தொகை ரூ.200 வரை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.100 மானியமாக வழங்கப்பட்டது. தற்போது இத்தொகை படிப்படியாக குறைந்து இம்மாதம் ரூ.24 மட்டுமே மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் குறைக்கப்பட உள்ளதாக செய்திபரவி வரும் நிலையில், மானியம் குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

வீடுகளுக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் தற்போது ரூ.610-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x