Last Updated : 09 Sep, 2020 09:27 AM

 

Published : 09 Sep 2020 09:27 AM
Last Updated : 09 Sep 2020 09:27 AM

விடுதலை அதிகரிப்பு, தண்டனை குறைவு: குற்ற வழக்குகள் சரியாக விசாரிக்கப்படுவதில்லை - உயர் நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் குற்ற வழக்குகள் சரியாக விசாரிக்கப்படுவதில்லை. இதனால் குற்றவாளிகளை தண்டிப்பது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மாத் தூரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் சொத்து தகராறில் 2010-ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலமுருகன் என்பவருக்கு சிவகங்கை நீதிமன்றம் 2014-ல் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண் டனை வழங்கியது. இதை ரத்து செய்யக் கோரி பாலமுருகன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் தொடர்புடைய பல பேரிடம் விசாரணை நடத்தவில்லை. இந்த வழக்கு விசாரணையை டிஎஸ்பி கண்காணிக்க வேண்டும், தேவைப்பட்டால் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி விசாரணையை டிஎஸ்பி கண்காணித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வழக்கில் அதிகாரிகள் முதல் அரசு வழக்கறிஞர்கள் வரை மெத்தனமாக நடந்துள்ளனர். அப்பாவி ஏழை ஒருவரின் கொலை யில் தொடர்புடைய உண்மை யான குற்றவாளிகள் தப்பிக்க உதவியுள்ளனர். திருப்பாச்சேத்தி காவல் ஆய்வாளர் நியாயமாக விசாரணை நடத்தவில்லை. உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

ஒரு குற்ற வழக்கில் விசாரணை எப்படி நடைபெற வேண்டும் என்ற அடிப்படையே தெரியாமல் மெத்தனமாகவும், தன் விருப்பத்துக்கு ஏற்பவும் விசாரணை அதிகாரி செயல்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு குடி மகன்களையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. நீதிமன்றத்தின் கடமை குற்றவாளி களின் உரிமையைப் பாதுகாப்பது மட்டும் அல்ல, அப்பாவிகளுக்கு நீதி வழங்கி பாதுகாப்பதும் தான். குற்றவியல் நீதி முறையில் விசாரணை அமைப்புகளுக்குப் பெரும் பங்கு உள்ளது. விசாரணை சரியாக நடைபெற்றால் மட்டுமே சரியான நீதி வழங்க முடியும்.

தமிழகத்தில் குற்றவியல் வழக்கு விசாரணையின் தரம் குறைந்து வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது. இந்த வழக்கில் மட்டும் அல்ல 50 சதவீத வழக்குகளில் விசாரணையின் தரம் குறைவாகவே உள்ளது. இதேபோல் விசாரணை தொடர்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

இதனால் இந்த வழக்கில் உள்துறை செயலர், டிஜிபி, இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் முத்துக்குமார், பவுன் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். விசா ரணை அதிகாரிகள் குற்ற வழக்குகளை விசாரிப்பதில் போதிய நிபுணத்துவம் பெற்றுள் ளார்களா?, இது உயர் அதிகாரி களால் எவ்வாறு உறுதி செய்யப் படுகிறது?, மெத்தனமான விசா ரணையால் குற்றவாளிகள் விடுதலையாகும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?, டிஎஸ்பி, ஏஎஸ்பி, எஸ்பி, டிஐஜி, ஐஜி ஆகியோர் விசாரணையை எவ்வாறு கண்காணிக்கின்றனர்? என்பதற்கு உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x