காவலர்களுக்கு 4 ஆண்டுகளில் 10 ஆயிரம் குடியிருப்புகள்

காவலர்களுக்கு 4 ஆண்டுகளில் 10 ஆயிரம் குடியிருப்புகள்
Updated on
2 min read

கடந்த 4 ஆண்டுகளில் 10 ஆயிரத்து 89 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு, மீட்புப் பணிகள் மற்றும் சிறைத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதில் திமுக உறுப்பினர் எ.வ.வேலு பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசியதாவது:

காவலர்களுக்கு வீட்டு வசதி வழங்குவது குறித்து திமுக உறுப் பினர்கள் பேசுவது பொருத்தமாக இருக்காது. காவலர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக 1980-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியில் ‘தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம்’ உருவாக்கப்பட்டது. 1989-ல் திமுக ஆட்சியில் இது மூடப்பட்டது. 1991-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் ‘தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம்’ தொடங்கப்பட்டது.

காவலர்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் இந்த அவையில் தெரிவித் தேன். 4 ஆண்டுகளுக்குள் வீட்டு வசதித் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்வோம் என கூற வில்லை. அது சாத்தியம் இல்லாத ஒன்றாகும். படிப்படியாகத்தான் வீடுகள் கட்ட முடியும்.

கடந்த 2012-ல் ‘உங்கள் சொந்த இல்லம்’ என்ற திட்டத்தை அறிவித்தேன். இத்திட்டத்தின்கீழ் காவல், தீயணைப்பு, மீட்புப் பணிகள் மற்றும் சிறைத் துறையில் பணிபுரிபவர்களுக்கு குறைந்த செலவில் 36 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்க அர சாணை வெளியிடப்பட்டது. இதற் காக ஒவ்வொரு மாவட்டத் தலை நகரங்களிலும் சுமார் 10 ஏக்கர் நிலங்களை கண்டறியும்படி ஆட்சியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. முதல்கட்டமாக காஞ்சி புரம் மாவட்டம் மேலக்கோட்டை யூரில் 47.6 ஏக்கரில் மொத்தம் 2 ஆயிரத்து 673 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி, மதுரை, சிவ கங்கை, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இத் திட்டத்துக்கான நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சேலம், அரியலூர், தருமபுரி, ராமநாதபுரம், தேனி, திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் நிலம் தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை 39 ஆயிரத்து 674 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரத்து 89 காவலர் குடியிருப்புகள் அதாவது மொத்த குடியிருப்புகளில் 25 சதவீத குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத் தின் கீழ் 1,971 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன என்றார் முதல்வர்.

குற்றங்கள் குறைந்துள்ளன

பின்னர் விவாதத்துக்கு பதி லளித்து முதல்வர் பேசியதாவது: அரசின் அறிவுரைகள்படி, மாநிலத் தின் சட்டம் ஒழுங்கை சீரிய முறை யில் தொடர்ந்து பராமரிப்பதுடன், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்துள்ளன.

கடந்த 2005-ம் ஆண்டு அதிமுக ஆட்சி இறுதியில் கொலைகளின் எண்ணிக்கை 1,366 ஆக இருந் தது. ஆனால், 2010 திமுக ஆட்சி யின் இறுதியில் 1,715 ஆக உயர்ந்திருந்தது. இது, கடந்த ஆண்டு 1,678 ஆக குறைந்துள்ளது.

சொத்துக்களை மீட்பதில் கடந்த 2 ஆண்டுகளிலும் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது.

பாலியல் பலாத்கார வழக்கு களும் 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அகில இந்திய அளவில் ஆண்டுக்கு ஆண்டு குற்ற நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே குற்றங்கள் குறைந்து வருகின்றன.

காவல்துறையில் ஏற்படவுள்ள காலிப் பணியிடங்களை முன்ன தாக கண்டறிந்து, நிரப்ப உத்தரவிட்டு இதுவரை 11 ஆயிரத்து 488 காவலர்கள் பணி யமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 1,078 உதவி ஆய்வாளர்கள், 294 தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் கள், 202 விரல் ரேகை பதிவு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in