Published : 09 Sep 2020 09:14 AM
Last Updated : 09 Sep 2020 09:14 AM

தமிழக மாவட்டங்களுக்கு கடன் வழங்கும் அளவு குறைப்பு; ரிசர்வ் வங்கி முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழக மாவட்டங்களுக்கு கடன் வழங்கும் அளவை குறைக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

முன்னுரிமை கடன் பிரிவில் புதிய திருத்தங்கள் தொடர்பாக, செப்டம்பர் 4-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் சில சரத்துகள் பாரபட்சமாக அமைந்துள்ளன. அதில் 1-ஏ சரத்தின் படி, தமிழகத்தில் உள்ள 32 மாவட் டங்களும் (38 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பு) முன்னு ரிமை கடன் அதிகம் வழங்கப்படும் மாவட்டங்களாக வகைப்படுத் தப்பட்டிருப்பதால் அனைத்து மாவட்டங்களுக்கும் கடன் வழங்கு வது குறைக்கப்படும் சூழல் ஏற் பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இதர மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகம் தனிப்படுத்தப்படுத் தப்படுவது போல் தோன்றுகிறது.

தமிழகத்தில் உள்ள மாவட்டங் களில் பெறப்பட்ட கடன்கள் அனைத்தும் அவை எந்த நோக்கத்துக்காக பெறப்பட்டதோ அதற்காக பயன்படுத்தப்பட்டு, உரிய காலத்தில் கடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தியதால் கடன் வழங்கும் அளவை குறைத்து அந்த மாவட்டங்களை தண்டிக்கக் கூடாது. மாறாக, கூடுதல் கடன் கொடுத்து அவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

மாவட்டங்களுக்கு கடன் வழங்கும் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் கொள்கை சரியானது அல்ல. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு கடன் வழங்குவதை குறைக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவு உடனடியாக மாற்றியமைக்கப்பட வேண்டும். தற்போது, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் கரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடனை உரிய காலத்தில் திருப் பிச் செலுத்திய மாநிலங்களுக்கு அதிக கடன் பெறு வதற்கு தகுதி உண்டு. எனவே, தமிழகத்துக்கு கடன் வழங்கும் அளவை குறைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். கடன் வழங்கும் விஷயத்தில் பழைய நடைமுறையையே தொடர வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x