

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகினர்.
திருப்பத்தூர் மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் பகுதி களில் கனமழை பெய்தது. குறிப்பாக, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் மட்டும் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மழை விடாமல் பெய்தது.
ஆம்பூர் அடுத்த கரும்பூர், அரங்கல் துருகம், மிட்டாளம், விண்ணமங்கலம், மாதனூர், மின்னூர், வடபுதுப்பட்டு, சோலூர் உள்பட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக கனமழை தொடர்ந்து பெய்தது.
இந்த கனமழையால் ஆம்பூர் அடுத்த விண்ண மங்கலம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த தால் பொதுமக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். தொடர் மழை யால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
கனமழை காரணமாக ஆம்பூரில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய் யப்பட்டது. மழைக் காலங் களில் விண்ணமங்கலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதால் பொது மக்கள் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாய்களை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல, வாணி யம்பாடி, உதயேந்திரம், அம்பலூர், நாராயணபுரம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. வாணியம்பாடியில் அதிகபட்சமாக 36 மி.மீட்டர் அளவுக்கு மழை யளவு பதிவானது. இதனால், தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீருடன் மழைநீரும் சாலைகளில் வெள்ளம்போல் ஓடியது.
நேற்று காலை நிலவரப்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்: ஆலங்காயம் 6 மி.மீ., ஆம்பூர் 21.4 மி.மீ., வடபுதுப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை 31.2 மி.மீ., நாட்றாம் பள்ளி 10.2 மி.மீ., திருப்பத்தூர் 16.2 மி.மீ., வாணியம்பாடி 36 மி.மீ., என மொத்தமாக 133 மி.மீ., மழையளவு பதிவாகி யிருந்தன.