

புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சராசரி யாக நாளுக்கு 300 முதல் 400 பேர் வரைதொற்றால் பாதிக்கப்பட்டனர். இறப்புஎண்ணிக்கையும் வேகமாக அதிகரித் தது. செப்டம்பர் முதல் வாரத்திலும் அதே நிலை தொடர்கிறது. இதுவரை 335க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின் றன. படுக்கைககள் இல்லாததால் வீடுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரோனா பரவலைகட்டுப்படுத்த கரோனாவால் பாதிக்கப் பட்ட 32 பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றிற்கு மட்டும் உள்ளூர் ஊரடங்கு கடந்த 31-ம் தேதி முதல் 6-ம் தேதி வரைஅறிவிக்கப்பட்டது. மொத்த புதுச் சேரிக்கு ஊரடங்கு இல்லாத நிலையில்,ஆங்காங்கே குறிப்பிட்ட சில பகுதி களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சியினரும் அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஆட்சியரால் அறிவிக் கப்பட்ட அந்த உள்ளூர் ஊரடங்கு, அறிவிப்பே இல்லாமல் சத்தமின்றி கைவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நேற்று (செப். 8) முதல் வரும் 14-ம் தேதி வரை 11 தெருக்களுக்கு மட்டும் உள் ளூர் ஊரடங்கிற்கு ஆட்சியர் அருண் மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சியரின் உத்தரவு விவரம்
ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய உள்துறை அமைச்ச கத்தின் வழிகாட்டுதலின்படி தொற்று பரவுவதை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் சுகாதாரத் துறைகொடுத்த தகவலின் அடிப்படையில்உள்ளூர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள் ளது” என்று கூறியுள்ளார்.
இதன்படி மேட்டுப்பாளையம் மகாலட்சுமி நகரில் உள்ள 5வது குறுக்குத்தெரு, சண்முகாபுரம் அண்ணாசாலை, வீமன்நகர் ஓடை வீதி, முதலியார் பேட்டை வள்ளலார் தெரு 2வது குறுக்கு, உருளையன்பேட்டை செங் குந்தர் வீதி, விடுதலை நகர் ஜீ. பிளாக், ஒதியஞ்சாலை புதுநகர் மெயின்ரோடு, லாஸ்பேட்டை அசோக்நகர் பாரதிதாசன் வீதி, கிருஷ்ணாநகர் 14வது குறுக்கு, கோரிமேடு ஜிப்மர் ஜீ. குடியிருப்பு, ரெட்டியார்பாளையம் பூமியான்பேட் பாவாணர் நகர் ஆகிய 11 தெருக்களுக்கு உள்ளூர் ஊரடங்கு நேற்று அமலுக்கு வர வேண்டும்.
‘ஊரடங்கு அமலான தெருக்ககளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அனைத்து கடைகள் மற்றும் தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். வெளியாட்கள் யாரும் இந்த பகுதியில் அனுமதிக்கப்பட கூடாது. மேலும், இந்த பகுதியில் வாகனங்கள் செல்லவும் அனுமதி இல்லை’ என்று ஆட்சியரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று இப்பகுதியில் ஊரடங்கு அமலுக்கு வரவில்லை. அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்படவில்லை. போலீஸார் ரோந்தும் நடக்கவில்லை.
ஆட்சியர் நேற்று முன்திம் இரவு அறிவித்தால் இதற்கான ஆணை வருவாய்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி துறை ஆகியவற்றுக்கு கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமூக வலை தளங்களில் பரவிய தகவல்
இதற்கிடையே, ஆட்சியர் அறி வித்த தகவல், குறிப்பிட்ட பகுதி மக்க ளிடையே சமூக வலை தளங்களில் பரவியது. அதனால், அப்பகுதியில் வசிப்ப வர்கள் ஊரடங்கு இருக்குமோ என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டனர். ஆனால், அறிவிப் புக்கு மாறாக ஊரடங்கு அமல்படுத் தப்படாததால் இப்பகுதி மக்களிடையே நேற்று முழுவதும் குழப்பமே நீடித்தது.
ஏற்கெனவே, புதுச்சேரியில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாதது, மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாதது, அரசு - ஆளுநர் பனிப்போரால் நடக்கும் நிர்வாக குழப்பம் ஆகியவற்றால் கரோனாவை கட்டுப்படுத்தும் பணிக ளில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு மத்தியில் அவ்வவ்போது இப்படி அறிவிக்கப்பட்டும் இம்மாதிரியான நடைமுறைப்படுத்தப்படாத உள்ளூர் ஊரடங்கால் மேலும் மக்கள் குழம்பித் தவிக்கின்றனர்.