Published : 13 Sep 2015 10:23 AM
Last Updated : 13 Sep 2015 10:23 AM

பயிற்சி நிறைவை முன்னிட்டு பரங்கிமலை ராணுவ அகாடமியில் 279 அதிகாரிகள் கண்கவர் அணிவகுப்பு

சென்னை பரங்கிமலை ராணுவ பயிற்சி அகாடமியில் 279 அதிகாரி கள் தங்களது பயிற்சியை நிறைவு செய்தனர். இதையொட்டி நேற்று நடந்த கண்கவர் அணிவகுப்பை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

ராணுவத்தில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்ட 279 அதிகாரி களுக்கு சென்னை பரங்கிமலை யில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டது. 230 ஆண்கள், 33 பெண்கள், 16 வெளிநாட்டு வீரர்கள் இங்கு பயிற்சி பெற்றனர். பயிற்சியை நிறைவு செய்த ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி பரங்கிமலை ராணுவ பயிற்சி அகாடமியில் நேற்று நடந்தது. கிழக்குப் பிராந்திய ராணுவ தளபதி பிரவீன் பக்சி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அணிவகுப்பை பார்வையிட்டார். அவர் பேசியதாவது:

இந்திய ராணுவம் கடை பிடித்துவரும் நாட்டுப்பற்று, ஒழுக்கம் மற்றும் சிறப்பான பணியின் காரணமாக உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் நன் மதிப்பு பெற்றுள்ளது. உள்நாட்டி லும், வெளியிலும் உள்ள சவால் களை மிகத் திறமையாக எதிர் கொள்வதுடன், அமைதிப் பணி மற்றும் பேரிடர் மீட்பு பணிகளிலும் இந்திய ராணுவம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இப்பயிற்சி முடித்து பணியில் சேர உள்ள அனைவரும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி ராணு வத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு பிரவீன் பக்சி கூறினார்.

தென்பிராந்திய ஜெனரல் ஆபீஸர் கமாண்டிங் ஜக்பீர் சிங், பரங்கிமலை ராணுவ பயிற்சி அகாடமியின் கமாண்டன்ட் சாஹி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, ராணுவ வீரர் களின் கண்கவர் அணிவகுப்பை அவர்களது குடும்பத்தினர், பொது மக்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு களித்தனர். அனைத்துப் பயிற்சி யிலும் சிறப்பாக திகழ்ந்ததற்காக பிரகுன் பாலி என்ற அதிகாரிக்கு வீரவாள் பரிசு வழங்கப்பட்டது. பயிற்சியில் முதல் பரிசு பெற்ற விஷ்வராஜ் சிங்குக்கு தங்கப் பதக்கம், 2-ம் பரிசு பெற்ற அன்குஷ் குமார் சர்மாவுக்கு வெள்ளிப் பதக்கம், 3-ம் பரிசு பெற்ற அர்ஜுன் சர்மாவுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x