Published : 09 Sep 2020 07:17 AM
Last Updated : 09 Sep 2020 07:17 AM

லக்ஸம்பர்க் கவுரவ தூதராக சேதுராமன் மகாலிங்கம் நியமனம்

லக்ஸம்பர்க் கவுரவ தூதராக நியமிக்கப்பட்டுள்ள சேதுராமன் மகாலிங்கத்துடன் (இடது), அந்நாட்டின் வெளிநாடு மற்றும் ஐரோப்பிய விவகாரங்கள் துறை அமைச்சர் ஜியான் அஸல்பார்ன், தலைமை தூதர் ஜியான் க்ளாட் குஜனர்.

சென்னை

தமிழகம், கேரள மாநிலங்களை உள்ளடக்கிய சென்னையில் இயங்கும் லக்ஸம்பர்க் தூதரகத்தின்கவுரவ தூதராக சேதுராமன் மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு முன்பு இப்பதவியைவகித்த சுஹாசினி மணிரத்னத்தின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, சேதுராமன்மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள் ளார். அரசின் பரிந்துரையை ஏற்றுலக்ஸம்பர்க் பிரபு கடந்த ஏப். 29-ல்இவருக்கான நியமன கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்தியகுடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் இவரது நியமனத்தைகடந்த ஜூலை 31-ல் உறுதிப்படுத்தியுள்ளார். மகாலிங்கத்தின் நியமனத்தை லக்ஸம்பர்க் நாட்டின் இந்திய தூதர் ஜியான் க்ளாட் குஜனர் வரவேற்றுள்ளார்.

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி மற்றும் செயல் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர் மகாலிங்கம். மேலும் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக குழுவில் இடம்பெற்றுள்ளார். பல சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து மகாலிங்கம் கூறும்போது, “சென்னையின் லக்ஸம்பர்க் கவுரவ தூதராக நியமிக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன். இது இப்பிராந்திய தொழில் வளர்ச்சிக்கு மதிப்பு சேர்ப்பதாக இருக்கும்” என்றார்.

இந்தியாவில் நேரடி முதலீடுசெய்துள்ள 15-வது நாடு லக்ஸம்பர்க் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x