Published : 09 Sep 2020 06:11 am

Updated : 09 Sep 2020 06:11 am

 

Published : 09 Sep 2020 06:11 AM
Last Updated : 09 Sep 2020 06:11 AM

விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு அம்பலம்; 37 அதிகாரிகள் சஸ்பெண்ட் 80 அலுவலர்கள் பணி நீக்கம்: தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தகவல்

financial-assistance-scheme-for-farmers

சென்னை

விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக் கும் பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தில் ரூ.110 கோடிக்கு முறை கேடு நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர் பாக 37 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 80 அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

நாடு முழுவதும் விவசாயி களுக்கு நேரடி நிவாரணம் அளிக் கும் வகையில், பிரதமரின் கிசான் திட்டம் மத்திய அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதில், பயனாளி ஒருவருக்கு 3 தவணை களாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அவர் களது வங்கிக் கணக்கில் செலுத்தப் படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத் தில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வேளாண் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, முறைகேடான நபர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகையை திரும் பப்பெறும் முயற்சியில் இறங்கி யுள்ளனர்.


இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி நேற்று கூறியதாவது:

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 39 லட்சம் தகுதியான பயனாளி களுக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் தகுதியான விவசாயி கள் பலர் விடுபட்டுவிட்டதாக நாடு முழுவதும் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, விவசாயி களுக்கான இணையதளத்தில் புதிய வசதியை மத்திய அரசு ஏற் படுத்தியது. அதன்படி, விவசாயிகள் தாங்களே தங்கள் பெயர், ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள், நிலத்தின் விவரங்களை பதிவு செய்யலாம். அதற்கு மாவட்ட நிர்வாகம், வட்டார அலுவலகம் அதே இணையதளம் வாயிலாக ஒப்புதல் அளித்தால், அவர் களது பெயர் பதிவு செய்யப்பட்டு விடும்.

கடந்த 5 மாதங்களாக மாவட்ட ஆட்சியர்கள், வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணி களில் ஈடுபட்டனர். இதனால், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வட்டார அளவில் விவசாயிகளின் பதிவுகளுக்கு ஒப்புதல் அளிப் பதற்கான இணையதள உள் நுழைவு முகவரி, கடவுச்சொல் (பாஸ்வேர்டு) ஆகியவை சில பகுதிகளில், குறிப்பாக கள்ளக் குறிச்சி, விழுப்புரம் மாவட்ட பகுதி களில் அதிகாரிகளிடம் இருந்தன. பதிவு செய்யப்படும் விவசாயிகளின் ஆதார் சரியானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக இவை வழங்கப்பட்டிருந்தன.

அந்த உள்நுழைவு முகவரி மற்றும் கடவுச்சொல்லை அங் கிருந்த கணினி இயக்குபவர்களிடம் இருந்து தனியார் முகவர்கள் சிலர் வாங்கியோ, திருடியோ அப்பாவி பொதுமக்களிடம் இருந்து விவரங் களைப் பெற்று பதிவு செய்துள்ள தாக புகார் வந்துள்ளது. தனியார் முகவர்கள், அப்பாவி மக்களிடம் சென்று, ‘உங்களுக்கு மத்திய அரசின் கரோனா நிவாரண நிதி கிடைக்கும்’ என்று கூறி, அவர் களின் ஆதார், வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று பதிவு செய் துள்ளனர்.

அவ்வாறு பதிவு செய்ய ஒரு நபரிடம் இருந்து ரூ.500 வரை பெற்றுள்ளனர். அதிக அளவிலான கணினி மையங்களில் இந்த தவறு நடந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, செங்கல் பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 6 லட்சம் பயனாளிகள் புதிதாக பதிவு செய்யப்பட்டிருந்தனர். மற்ற 25 மாவட்டங்களில் மொத்தமாகவே ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்த போதுதான், நிறைய பயனாளிகளின் பெயர், தனியார் மூலம் முறை கேடாக சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 2-வது வாரத்தில் மாவட்டங்களுக்கு 10 குழுக்கள் வீதம் ஆய்வுக்காக அனுப்பப்பட் டன. அதன்பின் மாவட்ட ஆட்சி யர்களுடன் தொடர்ந்து கூட் டம் நடத்தி, கரோனா காலத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்டவர்கள் பெயர்களை ஆய்வு செய்ய அறி வுறுத்தினோம். இதுவரை 5 லட்சம் பேருக்கும் மேலான பயனாளி கள் சந்தேக பட்டியலில் இருப் பதை கண்டறிந்தோம். இதைத் தொடர்ந்து உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி மூலம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, இதுவரை 18 பேர் வரை கைது செய்யப் பட்டுள்ளனர்.

அதிக அளவில் முறைகேடாக பெயர்களை சேர்த்த பகுதிகளில் அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்துள்ளனர். அந்தவகையில் வேளாண் துறை உதவி இயக்கு நர்கள் உட்பட 37 அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கணினி இயக்குபவர், ஏடிஎம் பிளாக் மேலாளர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் உட்பட 80 பேரை பணி நீக்கம் செய்துள்ளோம். சிபிசிஐடி விசாரணை முடிவில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தகுதியில்லாத 5 லட்சத்து 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பயனாளி களிடம் இருந்து பணத்தை பெற, வங்கிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.32 கோடி திரும்ப பெறப் பட்டுள்ளது. இதைவிட 3 மடங்கு, அதாவது ரூ.110 கோடி வரை திரும்ப பெறப்பட வேண்டியுள்ளது. ஒன்றரை மாதத்தில் முழு பணத் தையும் திரும்ப பெறுவோம். அரசிடம் அனைத்து தகவல்களும் இருப்பதால் யாரும் தப்பிக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். பெயர்கள் நீக்க நடவடிக்கை 
பிரதமரின் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை மத்திய அரசு பாராட்டியுள்ளது. பணத்தை திரும்ப பெறுவதுடன், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்ட பெயர்கள் மட்டுமே நீக்கப்படும். உண்மையான விவசாயிகள் யாருமே பாதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும், தற்போதுள்ள பயனாளிகளில் இறந்தவர்கள், நிலத்தை விற்பனை செய்தவர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இனி, மாவட்ட அளவில் கடவுச்சொல் உருவாக்கப்பட்டு, அது மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும். தகுதியானவர்களுக்கு தொடர்ந்து அரசின் நிதியுதவி கிடைக்கும். டிசம்பர் மாதம் அடுத்த தவணை செலுத்தப்படும்போது சரியான பயனாளிகளுக்கு செல்லும் என்று ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.


விவசாயிகள்நிதியுதவி திட்டம்முறைகேடு அம்பலம்அதிகாரிகள் சஸ்பெண்ட்பணி நீக்கம்தமிழக வேளாண் துறைககன்தீப் சிங் பேடிFarmers

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author