

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள மாட்டார் என அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடி, இன்று மாலை பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரஜினிகாந்த் வெளியூர் சென்றிருப்பதால், பதவியேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என அவருக்கு நெருங்கிய தரப்பு தெரிவித்துடுள்ளது. இருப்பினும், கூடுதல் தகவல்கள் அளிக்க அத்தரப்பு மறுத்துவிட்டது.
நரேந்திர மோடி, பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நேற்றிரவு, (ஞாயிறு இரவு) நடிகர் ரஜினிகாந்த் வீட்டருகே திரண்ட மாணவ அமைப்பினர், மோடி பதவியேற்பு விழாவுக்கு அவர் செல்லக்கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.