திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை
Updated on
1 min read

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி எச்சரித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன், ‘‘ஏழைகளின் பொழுதுபோக்காக உள்ள திரை யரங்குகளில் ரூ.250 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் அரசு சார்பில் திரையரங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சி அறிவித்த 7 அம்மா திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? ’’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய தாவது:

மாநகராட்சிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள், வணிக வளாகத்துடன் கூடிய திரையரங்குகளில் ரூ.10 முதல் ரூ.120 வரையும், மற்ற குளிர்சாதன திரையரங்குகளில் ரூ.10 முதல் ரூ.50 வரையும், நகராட்சிகளில் ரூ. 5 முதல் ரூ.40 வரையும், பேரூராட்சிகளில் ரூ.5 முதல் ரூ.25 வரையும், கிராமங்களில் ரூ.5 முதல் ரூ.15 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை திரையரங்குகளில் பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அரசு அறி வுறுத்தியுள்ளது. அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in