Published : 04 Sep 2015 09:08 AM
Last Updated : 04 Sep 2015 09:08 AM

கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலை கட்டுமானம்: அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரிய அனுமதிக்கு காத்திருப்பு - அணுமின் நிலைய வளாக இயக்குநர் தகவல்

கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலை கட்டுமானப் பணிகளுக்காக, அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரிய அனு மதியை எதிர்பார்க்கிறோம்’ என்று அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் நேற்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கூடங்குளம் முதல் அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஜூன் 24-ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது எரியூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

2-வது அணுஉலையில் யுரேனியம் எரிகோல்கள் நிரப்புவதற்கு முன் இறுதி கட்ட ஆய்வு மேற்கொள்ள இந்திய அணு சக்தித்துறை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்படும். 3 மற்றும் 4-வது அணுஉலைகள் கட்டுமான பணிகளுக்கு அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் இன்னும் அனுமதி அளிக்க வில்லை என்று தெரிவித்தார்.

முதலாவது அணுஉலையில் இருந்து அகற்றப்படும் எரியூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல் கழிவுகளை எங்கு வைக்க திட்டம்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், `அவை அணுஉலை வளாகத் திலேயே பாதுகாப்பாக வைக்கப் படும். நீங்களே வந்து பார்வையிடலாம்’ என்று கூறினார்.

அணு உலைகளில் மின் உற்பத் திக்கு காலதாமதம் ஏற்பட காரணம் என்ன? என்று கேட்டபோது, `பல்வேறு தொழில் நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றன. அதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது’ என்றார். தமிழ கத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை போக்க கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தியை விரை வாக தொடங்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், `அதுபோன்று கேட்டுக் கொள்ளப் படவில்லை’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x