

மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.16,725 ஊதியம் வழங்க, கடந்த 2017-ம் ஆண்டு அரசாணையை அமல்படுத்தக் கோரி, சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் உயர்த்தப்பட்ட ஊதியம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் அரசு அறிவித்த ரூ.2 லட்சத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரிப்பன் மாளிகையை முற்றுகையிடப் போவதாக மாநகராட்சி செங்கொடி சங்கம் அறிவித்திருந்தது.
இதைத் தடுக்க, ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அனைத்து வாயில்களும் நேற்று மூடப்பட்டன. ரிப்பன் மாளிகையை சுற்றி கூடிய சுமார்3 ஆயிரம் தொழிலாளர்களை கைது செய்த போலீஸார், பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தபோது, தொழிலாளர்கள் வெளியேற மறுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இது தொடர்பாக செங்கொடி சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சங்கத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், பொதுச் செயலர் பி.சீனிவாசலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ‘‘உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை, அமைச்சர் எஸ்.பி.வேலு மணியை சந்தியுங்கள்’’ என ஆணையர் கூறினார். தீர்வு கிடைக்காத நிலையில், கைது செய்து அடைக்கப்பட்ட இடங்
களில் இருந்து வெளியேற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.