சென்னையில் 5 மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது: கரோனா அச்சத்தால் பயணிகள் வருகை குறைவு

சென்னையில் 5 மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது: கரோனா அச்சத்தால் பயணிகள் வருகை குறைவு
Updated on
1 min read

சென்னையில் கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு, மெட்ரோ ரயில்சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. இருப்பினும், கரோனா வைரஸ்அச்சம் காரணமாக பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.

கரோனா வைரஸ் பரவல்காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை, நாடு முழுவதும் நேற்று முதல் தொடங்கியது.

சென்னையிலும் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் நேற்று காலை 7 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.

அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நேரத்தில் 5 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும் இயக்கப்பட்டன. நாளைமுதல் (செப்.9) சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் நிலையங்களில், கரோனா முன்னெச்சரிக்கைஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஊழியர்கள் கையுறை, முகக்கவசங்கள் அணிந்துகொண்டு பணியாற்றினர். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னர், பயணிகள் வரிசையாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்த தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் வரை பயணிகளுடன் பயணம் செய்தார். அவருடன் மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பயணம் செய்தனர்.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில்நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகளுக்கு 100 சதவீதம் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளன. முகக்கவசங்கள் மற்றும் உரியஇடைவெளி விட்டு ரயிலில்அமர்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ரயிலில் இருவாசல்கள் வழியே மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மெட்ரோ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் மெட்ரோ ரயில் 50 விநாடிகள் நின்று செல்லும், பயணிகள் உரிய இடைவெளியை கடைபிடித்து பொறுமையாக மெட்ரோ ரயில்களில் ஏறுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்ப்பது, உரிய இடைவெளியை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்கு முன்பு மெட்ரோ ரயில்களில் தினமும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

தற்போது, கரோனா அச்சத்தால், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் வருகை குறைவாக இருக்கிறது. இருப்பினும், வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கைபடிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். பயணிகளை பாதுகாப்பாக கையாளுவதற்கானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், பயணிகள் எந்தவித அச்சமும் இன்றி பயணிக்கலாம்’’என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in