

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் அவினாசி லிங்கம் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் பதிலளித்தார். இத்தீர்மானத்தின் மீது இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் எம்.ஆறுமுகத்தை பேசுமாறு பேரவைத் தலைவர் அழைத்தார்.
அந்த நேரத்தில், டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற் கொலை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோஷம் போட்டபடி இருந்தனர். பேரவைத் தலைவர் அழைத்ததும் இந்திய கம் யூனிஸ்ட் உறுப்பினர் ஆறுமுகம் எழுந்து பேச முயன் றார். ஆனால், அவரது மைக் ஆப் செய்யப்பட்டது.
அப்போது குறுக்கிட்டு பேசிய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘இந்திய கம்யூனிஸ்ட் உறுப் பினர் ஆறுமுகத்தை பேச விடாமல் அவரது மைக்கை மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி ஆஃப் செய்துள்ளார். சக உறுப்பினர் பேசுவதை தடுப்பது நியாயம்தானா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
காரமான சட்னியா?
பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து விவாதிக்க வேண்டும் என்று துரைமுருகன் (திமுக) வலியுறுத் தினார். அப்போது நிதி யமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் - துரைமுருகன் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சத்தமாக பேசிய துரைமுருகனைப் பார்த்து, ‘‘காலையில் காரமான சட்னி சாப்பிட்டீர்களா? ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்?’’ என அவரை அமைதிப்படுத்தும் வகையில் பன்னீர்செல்வம் கேட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.