

ஏழை விவசாயி வயிற்றில் இருந்த 10 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டியை அகற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்பிராயப்பிள்ளை (50). ஏழை விவசாயியான இவர் கூலித்தொழிலும் செய்து வந்தார். இவர் குடலிறக்கம் நோய்க்கு சிகிச்சைப் பெற சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருடைய வயிற்றில் மிகப்பெரிய அளவில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவைச் சிகிச்சை செய்து கட் டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி பொது அறு வைச் சிகிச்சைத் துறை டாக்டர்கள் ஜே.லலித்குமார், டி.துரை, டி.சித்ரா, மயக்க டாக்டர்கள் லதா, புனிதவதனி ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்து புற்றுநோய் கட் டியை வெற்றிகரமாக அகற்றினர்.
இதுதொடர்பாக மருத்துவ மனை டீன் டாக்டர் ஐசக் கிறிஸ் டியன் மோசஸ், ஆர்எம்ஓ டாக்டர் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
சுப்பிராயப்பிள்ளை தனக்கு வந்துள்ளது குடலிறக்க நோய் என்று நினைத்துக் கொண்டுதான் வந்தார். ஆனால் பரிசோதனை யில் அவரது வயிற்றில் புற்று நோய் கட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. டாக்டர்கள் குழு வினர் 4 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து 10 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டியை அகற்றியுள்ளனர். இனி அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. அவர் பழையபடி வேலைக்கு போக முடியும். இந்தியாவில் முதல் முறையாக 10 கிலோ எடையுள்ள வயிற்றுப் புற்றுநோய் கட்டி அரசு மருத்துவமனையில் அகற்றப்பட்டுள்ளது. முதலமைச் சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.3.5 லட்சம் வரை செலவாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது உதவி ஆர்எம்ஓக்கள் டாக்டர்கள் கீதா, சுபாஷினி மற்றும் அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர்கள் உடன் இருந்தனர்.