நடிகர் சுஷாந்த் வழக்கிற்குப் பிறகு சத்தான்குளம் சம்பவத்தின் தடயங்கள் ஆய்வு: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

நடிகர் சுஷாந்த் வழக்கிற்குப் பிறகு சத்தான்குளம் சம்பவத்தின் தடயங்கள் ஆய்வு: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
Updated on
1 min read

நடிகர் சுஷாந்த் வழக்கு தொடர்பான தடயங்களை தடயவியல் நிபுணர்கள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இது முடிந்ததும் சாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பான தடயங்களை நிபுணர்கள் ஆய்வு செய்வார்கள் என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிபிஐ மற்றும் சிபிசிஐடி தரப்பில் மூடி முத்திரையிட்ட கவரில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன.

சிபிஐ தரப்பில், ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டது தொடர்பான தடயங்களை மத்திய தடயவில் துறையைச் சேர்ந்த பல்துறை நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். தற்போது அந்தக்குழு நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

சாத்தான்குளம் வழக்கின் தடயங்கள் அக்டோபர் முதல் வாரத்தில் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை செப். 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in