

மடுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக ரூ.40 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் வரும் அக்டோபரில் திறக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மீனாட்சியம்மன் அருகே ரூ.40 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுமானப்பணி நடக்கிறது. இப்பணிகளை இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பார்வையிட்டார்.
அவருடன் மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். ஆய்வுக்குபிறகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:
பெரியார் பேருந்து நிலையத்தினை மேம்படுத்தும் பணி ரூ.162 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இப்பணிகளை மார்ச் 2021க்குள் முடிக்க திட்டமிடப்படுள்ளது.
சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் எளிமையாக கோயிலுக்கும், ஷபாப்பிங்கிற்குமு் வந்து செல்ல வசதியாக மீனாட்சியம்மன் கோவில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய சென்ட்ரல் மார்கெட் பகுதியில் நவீன வசதிகளுடன் இரண்டு அடித்தளங்கள் கொண்ட பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம், புராதன சின்னங்கள் விற்பனை செய்யும் அங்காடி மையம் ரூ.40.19 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இப்பணி வரும் அக்டோபர் 2020க்குள் பணி முடிக்கபட்டு வாகனங்கள் நிறுத்துவதற்கான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.