

பேச அனுமதி அளிக்காததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் நேற்றும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டம், தொழில்நுட்பத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடந்தது. அதிமுக எம்எல்ஏ கணிதா சம்பத் பேசும்போது, ‘2ஜி’ விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்எல்ஏக்கள், கணிதா சம்பத்தின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி பேரவைத் தலைவர் பி.தனபாலிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதை பேரவைத் தலைவர் ஏற்கவில்லை. விவாதம் முடிந்த நிலையில், திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் பேச அனுமதி கேட்டார். பேரவை தலைவர் அனுமதி அளிக்காததால் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.