

ஞாயிற்றுக்கிழமைகளில் கரேனா தொற்று அமலில் இருந்ததளர்வுகள் விலக்கிக்கொள்ளப்பட் டதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் நேற்று இறைச்சி, மீன் கடைகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொரு மாதமும் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்குகடைப்பிடிக்கப்பட்டு வந்தன.
கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பல்வேறுதளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவித்தது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்துக்கான ஊரடங்கில் மக்கள் எதிர்பாராத தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.
5 மாதங்களுக்குப் பிறகு தளர்வு கள் இல்லாத ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் நடமாட் டம் நேற்று அதிகமாக காணப்பட் டது. சுமார் 160 நாட்களாக மூடப்பட்டிருந்த தேவாலயங்கள் நேற்று திறக்கப்பட்டன. அதன்படி, அனைத்து தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன், தேவாலயங்களுக்கு சென்று சமூக இடைவெளியை பின்பற்றி பிரார்த்தனைக் கூட்டங்களில் பங்கேற்றனர்.
அதேபோல், கடந்த 2 மாதங் களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருந்த இறைச்சிக்கடை கள், மீன் கடைகள் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டன. மீன் மார்க்கெட்டில் பொது மக்கள் அதிகளவில் திரண்டிருந் தனர். ஒருசிலர் முகக்கவசங்கள் அணியாமலும், சமூக இடை வெளியை பின்பற்றாமலும் கடைகள் முன்பு ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதேபோல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கரோனா தொற்று வழிமுறைகளை கடைப் பிடிக்காமல் திரண்டிருந்தனர்.
வேலூர் கிருபானந்தவாரியார் சாலையில் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் ‘சண்டே மார்க்கெட்’ நேற்று திறக்கப்பட்டது.