சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ரூ.20 பத்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார்

சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ரூ.20 பத்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார்
Updated on
1 min read

சிவகங்கை உட்பட சில மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களாக ரூ.20 பத்திரங் களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், அவற்றை கூடுதல் விலைக்கு விற் பதாகப் புகார் எழுந்துள்ளது.

சொத்து பரிவர்த்தனை, வாடகை ஒப்பந்தம், வணிக ஒப்பந்தம், வங்கிகளில் கடன் பெறுதல் உள்ளிட்டவைக்கு பத்திரம் அவசியம். இதையடுத்து மாநில அரசுகள் தேவை அடிப்படையில் ஆர்டர் கொடுத்து மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அச்சகத்தில் இருந்து பத்திரங்களை பெறுகின்றன. ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என்ற அடிப்படையில் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டு, மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவற்றைப் பெற்று தமிழக அரசு மாவட்ட, சார்நிலைக் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கிறது. அங்கிருந்து பத்திர விற்பனையாளர்கள் பத்திரங்களை வாங்கி விற்பனை செய் கின்றனர். பதிவுத்துறை ஆன்லைன் மயமாக்கப்பட்டதால் பத்திரங்களின் தேவை குறைந்துவிட்டது. இதனால் கருவூலங்களுக்கு பத்திரங்களை அனுப்புவதை அரசு குறைத்துவிட்டது.

இருந்தபோதிலும் வங்கிகளில் கடன் பெறுதல், பல்வேறு உறுதிமொழி பத்திரம், வீடு, கடை வாடகை ஒப் பந்தம், தனிநபர்கள் இடையே ஒப்பந்தம் உள்ளிட்டவற்றுக்கு ரூ.20 பத்திரம் அதிகளவில் தேவைப்படுகிறது. கருவூ லங்களுக்கு பத்திரங்கள் வரத்து குறைந்துவிட்டதால், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களாக ரூ.20 பத்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி சிலர் பத்திரங்களை ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.

இதுபற்றி பத்திர எழுத்தர்கள் கூறியதாவது: பதிவுத்துறை ஆன்லைன் மயமானதால், பத்திரங்களை ஆர்டர் செய்வதை அரசு குறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பிற தேவைகளுக்கு பத்திரங்கள் அவசியம். இதனால் தட்டுப்பாடு இன்றி பத்திரங்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in