

தேனி பகுதியில் தொடர் மழை யால் தக்காளிகள் அழுகி வரு கின்றன. இதனால் உரிய விலை இருந்தும் மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தேனி அருகே வெங்கடாசல புரம், அம்மச்சியாபுரம், அல்லி நகரம், லட்சுமிபுரம், கோட்டூர், தர்மாபுரி, மார்க்கயன்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில், தக்காளி சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
விளைநிலங்களில் இருந்து பறித்து வரப்பட்ட தக்காளிகள் சாலையோரத்தில் தரம் பிரிக்கப்படுகிறது (உள்படம்) விஸ்வநாதன். தக்காளி பயிருக்கு ஏற்ற பருவ நிலை நிலவியதால் தற்போது செடிகளில் காய்ப்பிடித்து மகசூல் பருவத்தில் உள்ளன. இந் நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் விளைந்த தக் காளிகளில் நீர்பட்டு அழுகி வரு கிறது. மேலும் வயலுக்குள் தண் ணீர் தேங்குவதால் தரை அருகே உள்ள தக்காளிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அம்மச்சியா புரத்தைச் சேர்ந்த விவசாயி விஸ்வ நாதன் கூறுகையில், தற்போது தக்காளி மகசூல் பருவத்தை அடைந்துள்ளது. ஆனால், தொடர் மழை காரணமாக காய்கள் வெகுவாக அழுகி விட்டன. ஒரு பெட்டியில் 15 கிலோ தக்காளி பிடிக்கும். ஒரு ஏக்கருக்கு 200 பெட்டி பழங்கள் கிடைக்கும். இதில் 50 பெட்டி அளவுக்கு அதாவது 4-ல் ஒரு பங்கு பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளிக்கு தற்போது உரிய விலை கிடைக்கிறது. ஆனாலும் விளைந்த தக்காளி செடியிலேயே பாதிக்கப்படுவதால் நஷ்டம் ஏற்படுகிறது என்றார்.