Published : 06 Sep 2020 08:02 AM
Last Updated : 06 Sep 2020 08:02 AM

வடபழனி முருகன் கோயில் பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை தொடரக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

வடபழனி முருகன் கோயில் வடக்கு மாடவீதியில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை மறு உத்தரவு வரும் வரை தொடரக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக எஸ்.முரளிதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சென்னை வடபழனி முருகன் கோயில் வடக்கு மாடவீதி பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே 40 அடி அகலமுடைய வடக்கு மாடவீதியில் 18 அடி அகலத்துக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் கோயிலுக்காக வாகன நிறுத்தம் அமைக்க நான்கு இடங்களில் 150 கிரவுண்ட் நிலம் இருக்கும்போது ஆளுங்கட்சி பிரமுகரின் தலையீடு காரணமாக வடக்கு மாடவீதியில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வடபழனி வடக்கு மாடவீதியில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை தொடரக் கூடாது என்றும், இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x