

சென்னை பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்ற சுமார் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ராமு மணிவண்ணனை துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை மீண்டும் அதே பதவியில் நியமிக்ககோரியும் கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ‘கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா’ என்ற மாணவர் அமைப்பு சார்பில் நேற்று பல்கலைக்கழகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் முன்கூட்டியே ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர். பல்கலைக் கழகத்தை முற்றுகையிடு வதற்காக மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் பல்கலைக் கழகம் அருகே அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி திரும்பி செல்லுமாறு கூறினர். அதையும் மீறி முற்றுகையிட முயற்சி செய்த தால் அவர்கள் கைது செய்யப் பட்டனர்.
சுமார் 50 பேரை கைது செய்த போலீஸார் ஒரு மண்டபத்தில் அவர்களை அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.