

சென்னை வியாசர்பாடி மேம்பாலப் பணிகள் வரும் அக்டோபர் மாதம் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன் (பெரம்பூர்), ‘‘நீண்ட காலமாக நடந்து வரும் வியாசர்பாடி மேம்பாலப் பணிகள் எப்போது முடிவடையும்’’ என துணை கேள்வி எழுப்பி னார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘வியாசர்பாடி மேம்பாலப் பணிகள் 80 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் முடிந்துள்ளன.
சத்தியமூர்த்தி நகருக்கு செல்லும் பாலத்தின் ஒரு பகுதி வரும் அக்டோபரில் திறக்கப்படும். அந்தப் பகுதியில் நடைபெறும் ரயில்வே பணிகள் முடிவடைந்ததும் மேம்பாலப் பணிகளும் விரைவுபடுத்தி முடிக்கப்படும்’’ என்றார்.