

மதுரையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகள் ஒரு டன்கரும்புக்கு ரூ.5000 வழங்கக்கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதில், 2020-21 ஆண்டுக்கு மத்திய அரசுகரும்பு டன்னுக்கு ரூ.100 மட்டும் விலையை உயர்த்தி 10 சதம்பிழிதிறன் உள்ள கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.2850 விலையை மத்திய அரசு நிர்ணயித்து அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சராசரி கரும்பு பிழிதிறன் 9.5 சதத்திற்குள் இருப்பதால் ஒருடன் கரும்புக்கு 2020 - 21ல் ரூ.2707.50 மட்டுமே விலை கிடைக்கும். எனவே, 9.5 சதம் பிழிதிறன் கரும்பு ஒருடன்னுக்கு ரூ.5000 விலை வழங்கவேண்டும்.
மாநில அரசு கரும்புக்கான பரிந்துரை விலையை ஒரு டன்னுக்கு ரூ.500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.