Published : 19 Sep 2015 08:57 AM
Last Updated : 19 Sep 2015 08:57 AM

தனியார் நிறுவன நெல்லி பானம், கற்றாழை சாறு விற்கத் தடை: உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் என அரசு எச்சரிக்கை

சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவன நெல்லிச்சாறு பானத்தில் உடலுக்கு கேடு தரும் ஆசிட் அதிக அளவு கலந்திருப்பதாகக் கூறி அதன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தடை விதித் துள்ளார்.

சேலம் புது பஸ் நிலையம் அருகே உள்ளது வின்ஸ்டார் இந்தியா நிறுவனம். நெல்லிக் காய் பானம், கற்றாழை சாறு தயா ரித்து விற்பனை செய்யும் இந்த தனியார் நிறுவனம், பல் வேறு மாவட்டங்களில் நெல் லிக்காய் பானம் மற்றும் கற்றாலை சாறை பாட்டில்களில் அடைத்து, விற்பனை செய்து வருகிறது.

இவர்கள் விற்பனை செய்யும் நெல்லிச்சாறு பானத்தில் அமில கலப்பு உள்ளதாகவும், உட லுக்கு பக்க விளைவு ஏற்படுத் துவதாக மாவட்ட ஆட்சியர் வா.சம்பத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு துறை அதி காரி டாக்டர் அனுராதா, குறிப் பிட்ட தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட் டிருந்த நெல்லிக்காய் பானம் மற்றும் கற்றாழை சாறு பாட்டில் களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லிக்காய் பானம் கெடாமல் இருக்க பயன்படுத் தப்படும் பென்சாயிக் ஆசிட், அஸ்காரிக் ஆசிட் அதிக அள வில் கலந்திருப்பது ஆய் வில் தெரியவந்தது. இதைய டுத்து ஆய்வறிக்கை குறித்து அந்த நிறுவன உரிமையாள ருக்கு தகவல் தெரிவித்த உணவு பாதுகாப்பு அதிகாரி, “நெல்லிக்காய் பானம், கற்றாழை சாறு ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண் டும். அடுத்த 15 தினங்களுக் குள் தரமான பானம் தயாரித் ததற்கான ஆய்வு கூட பரி சோதனை அறிக்கையை தாக் கல் செய்து, முறைப்படி அனு மதி பெற்று விற்பனையை தொட ரலாம்” என்று தெரிவித்தார்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட தனி யார் நிறுவனத்தில் நெல்லிக் காய் பானம் விற்பனை செய்ய தடை விதித்து நோட்டீஸ் கொடுத்து வந்துள்ள நிலை யில், நேற்று மாலை வரை அந்த நிறுவனத்துக்கு சொந்த மான தொலைகாட்சியில் நெல்லிச்சாறு, கற்றாழை சாறு விற்பனைக்கான விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகி றது.

தடை விதிக்கப்பட்ட பொருளை விற்பனை நோக்கில் விளம்பரம் செய்யப்படுவதை யும் ஆட்சியர் வா.சம்பத் தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிட் கலப்பால் புற்றுநோய்க்கு வாய்ப்பு

சேலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் அனுராதா கூறும்போது, ‘நெல்லிக்காய் பானம், கற்றாழைச்சாறில் அஸ்காரிஸ் ஆசிட் கலக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிட் உணவு பொருளில் கலக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பென்சாயிக் ஆசிட் 420 பிபிஎம் என்ற அளவில் கலக்கலாம்; இந்த பானங்களில் 950 பிபிஎம் அளவு கலந்து இருப்பது ஆய்வக சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக ஆசிட் கலப்பால் உடல் உபாதைகள், நெஞ்சு எரிச்சல் ஏற்படக்கூடும். தொடர்ந்து இந்த ஆசிட் கலப்பு பானத்தை அருந்தினால், புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது’ என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x