

முல்லை பெரியாறு அணையைக் கட்டிய ஜான்பென்னிகுவிக் கட்டு மானத்துக்குப் பயன்படுத்திய பல பொருட்கள் திறந்த வெளியில் துருப் பிடித்து சிதைந்து வருகிறது. இவற்றை அருங்காட்சியகம் மூலம் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லை பெரியாறு அணை இருந்து வருகிறது. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணையை இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான்பென்னிகுவிக் கட்டினார்.
பெரியாறு அணை கட்ட பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் புதரில் பராமரிப்பின்றி கிடக்கின்றன. (வலது) பென்னிகுவிக் பயன்படுத்திய நாற்காலி சிதிலமடைந்த நிலையில் அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.பென்னிகுவிக்அணை கட்டுவதற்காக ஆங்கிலேய அரசு ஒதுக்கிய நிதியைக் கொண்டு கட்டுமானப் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை. மேலும் வெள்ளத்தினால் கட்டுமானம் சேதமாகியதுடன், ஏராளமான பொருட்களும் நீரில் அடித்துச் செல் லப்பட்டன.
அ.திருப்பதிவாசகன் கூடுதல் நிதி கிடைக்காததால் தனது சொத்துக்களை விற்றும், தமிழகத்தில் பல்வேறு ஜமீன்களிடம் நிதி பெற்றும் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார். இதற்காக லண்டன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கலவை இயந்திரம், கட்டுமானப் பொருட் களை கையாளும் உபகரணங்கள், இரும் புப் படகு ஆகியவற்றை வரவழைத்தார். பல்வேறு பிரச்சினைகள், உயிர்ச் சேதங் களுக்கு இடையே அணை கட்டும் பணி முடிந்தது. இந்நிலையில் அணை கட்டப் பயன்படுத்திய பல்வேறு தளவாடப் பொருட்கள் அணைப்பகுதியில் பாதுகாப்பு இன்றி திறந்த வெளியில் துருப்பிடித்து, புதர்மண்டிக் காணப்படுகின்றன.
அணைப் பகுதி அருகே ஊழியர் குடியிருப்பில் உள்ள பூட்டப்பட்ட அறையில் பென்னிகுவிக் பயன்படுத்திய நாற்காலி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் இரும்புப் படகும் அணையின் கரைப்பகுதியில் கவிழ்ந்து கிடக்கிறது. பொது மக்கள் இப்பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை.
இது குறித்து 18-ம் கால் வாய் விவசாயிகள் சங்கச் செயலாளர் அ.திருப்பதிவா சகன் கூறியதாவது:
தொழில்நுட்பம் அதிகம் இல்லாத காலத்தில் மலைப் பகுதியில் இவர் அமைத்த அணை இன்றும் தென்மாவட்ட மக்களின் வரப்பிரசாதமாக உள்ளது. எனவே இவர் பயன்படுத்திய பொருட்களை கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் உள்ள மணி மண்டபத்தில் காட்சிப்படுத்த வேண்டும். அருங்காட்சியகம் மூலம் பாதுகாக்க வேண்டும்.
இதன் மூலம் வருங்கால சந்ததியினர் இவரது சிறப்புகளை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றார். பொதுப்பணித் துறையினர் கூறுகையில், பல இயந்திரங் கள் கனமான இரும்பினால் அதிக எடையுடன் வடிவமைக் கப்பட்டுள்ளன. இவற்றைப் படகு வழியே தமிழகத்துக்கு கொண்டு வர முடியாது. வல்லக்கடவு வழியே கொண்டு வரலாம். ஆனால் அங்கு முறையான பாதை இல்லை. தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.