மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் லட்டு பிரசாதம்: வரிசையில் நின்று வாங்கிச் சென்ற பக்தர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு பிரசாதத்தை பெறும் பக்தர்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு பிரசாதத்தை பெறும் பக்தர்கள்.
Updated on
1 min read

கரோனா ஊரடங்கால் 5 மாதங்களுக்குப் பிறகு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் நேற்று முதல் வழங்கப் பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் கோயில்களில் பக்தர்களை அனுமதிக்க அரசு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று முதல் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இலவச லட்டு பிரசாதத்தை முகக்கவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in