உப்பு காற்றில் சிதையும் கடற்கரை கோயிலை நவீன தொழில்நுட்பத்தில் பராமரிக்க வேண்டும்: தொல்லியல் துறை தலைவர் அறிவுறுத்தல்

மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலை பார்வையிட்டு ஆய்வு செய்த தொல்லியல் துறை தலைவர் வித்யா வைத்தியநாதனிடம் பராமரிப்பு பணிகள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கினர்.
மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலை பார்வையிட்டு ஆய்வு செய்த தொல்லியல் துறை தலைவர் வித்யா வைத்தியநாதனிடம் பராமரிப்பு பணிகள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கினர்.
Updated on
1 min read

மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலை பார்வையிட்டு ஆய்வு செய்த தொல்லியல் துறை தலைவர்வித்யா வைத்தியநாதன், நவீனதொழில்நுட்பம் மூலம் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கற்சிற்பங்களை தொல்லியல் துறை பராமரிக்கிறது.

இந்நிலையில், தொல்லியல் துறை தலைவராக பொறுப்பேற்றுள்ள வித்யா வைத்தியநாதன், மாமல்லபுர கலைச் சின்னங்களை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, உப்பு காற்றால் சிதைந்து வரும் கடற்கரை கோயிலின் பராமரிப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் இந்த பராமரிப்பு பணிகளை பல்கலைக்கழக வல்லுநர்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறையில் மேற்கொண்டு கடற்கரை கோயிலை பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் துறையினருக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது் கண்காணிப்பாளர்கள் அருண்ராஜ், சுப்ரமணியன், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in