Published : 05 Sep 2020 07:41 AM
Last Updated : 05 Sep 2020 07:41 AM

மாற்றுத் திறனாளி உறவினரை கவனித்துவரும் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் இல்லை: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத் திறனாளி உறவினரைகவனித்துவரும் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து நிபந்தனையுடன் விலக்களிக்கும் வகையில் தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை ஒரு பணியிடத்தில் 3 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினால், இடமாற்றம் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. அரசுப் பணியில் ஏ, பி, சி பிரிவில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது மாற்றுத் திறனாளி உறவினரைகவனித்துவரும் அரசுப் பணியாளர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து நிபந்தனையுடன் கூடிய விலக்களித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுறித்து தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலர் ஸ்வர்ணா வெளியிட்ட அரசாணை:

மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகளை உடைய அரசு ஊழியர்கள், ஒரே இடத்தில் 3 ஆண்டுகள்பணியாற்றினால், அந்த ஆண்டுமுடிவதற்கு முன் இடமாற்றத்தைநிறுத்தி வைக்க அரசிடம் கோரிக்கை வைத்தால் 5 ஆண்டுவரை இடமாற்றம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

விலக்கு அளிக்கலாம்

இந்நிலையில், கடந்த 2018-ம்ஆண்டு அக்டோபர் மாதம் மத்தியஅரசு அனுப்பிய கடிதத்தில், மாற்றுத் திறனாளிகள் சட்டப்படி,குறைபாடுகளை கொண்ட மகன், மகள், பெற்றோர், வாழ்க்கைத் துணை, சகோதரர் அல்லது சகோதரி என இவர்களில் ஒருவரை அரசு ஊழியர் கவனித்துவரும் பட்சத்தில், அந்த அரசு ஊழியரை நிர்வாக வசதிக்காக இடமாற்றம் அல்லது சுழற்சி இடமாற்றம் செய்வதில் இருந்துவிலக்கு அளிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

இதை ஏற்று, வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் மே 31-ம் தேதிக்குள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் நிலையில், மாற்றுத் திறனாளி உறவினரை கவனித்து வரும் அரசுஊழியர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து நிபந்தனையுடன்விலக்களிக்கப்படுகிறது. அதேநேரம் அந்த அரசு ஊழியரால்கவனிக்கப்படுபவர், மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறைபாடுகளைக் கொண்டவர் என்பதற்கு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x