

சட்ட ஆணையர் உ.சகாயத்துக்கு 5-வது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை மேற் கொண்டு வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயத்துக்கு பல்வேறு இடங்களிலிருந்து ஏற்கெனவே 4 முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.
இந்நிலையில், 5-வது முறை யாக நேற்று முன்தினம் இரவு மதுரை நுண்ணறிவு பிரிவு அலு வலகத்துக்கு தொலைபேசியில் பேசிய மர்மநபர் ஒருவர், சட்ட ஆணையர் சகாயத்தின் அறிக் கையையும், அவரையும் அழித்து விடுவோம் எனக் கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு, அவரைத் தேடி வருகின்றனர்.