

இலங்கையில் நடக்கவுள்ள இந்தோ- ஸ்ரீலங்கா கராத்தே போட்டி களில் பங்கேற்க பொருளாதார வசதி இல்லாததால் முதல்வர் உதவ வேண்டும் என்று முதல்வர் தனிப்பிரிவில் இரு மாணவிகள் நேற்று மனு அளித்தனர். மாணவிகளின் தாயார் தேவி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
எனது மூத்த மகள் தீபிகா அயனாவரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படிக்கிறாள். எனது இளைய மகள் ரூபிகா அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறாள். எனது மகள்கள் இருவரும் தேசிய அளவிலான பல்வேறு கராத்தே போட்டிகளில் தங்கம் வெள்ளி போன்ற பதக்கங்களை வென்றுள் ளனர். மேலும், இருவரும் கருப்பு பெல்ட் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், எனது மகள்களுக்கு இலங்கையில் நடக்கவுள்ள 5-வது இந்தோ லங்கா கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. இந்தப் போட்டிகள் வரும் அக்டோபர் 25-ம் தேதி நடக் கிறது.எனக்கு போதிய வசதி இல்லாததால் அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள முதல்வர் உதவ வேண்டும்.
இவ்வாறு தேவி கூறினார்.