

தற்கொலை செய்துகொண்ட திருச் செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா வின் இரு மொபைல் எண்களுக்கும் கடந்த 10 நாட்களாக வந்த அழைப்புகள், அவர் தொடர்பு கொண்டு பேசிய அழைப்புகள் குறித்த பட்டியலை சிபிசிஐடி போலீஸார் எடுத்துள்ளனர். அடிக் கடி பேசியவர்கள், அதிக நேரம் பேசியவர்கள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விஷ்ணுபிரியா கடந்த 18-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் பணியில் சேர்ந்த ஏழு மாதத்தில் இந்த சம்பவம் நடந்ததாலும், தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரி என்பதாலும் அவரது இறப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளின் மரணத்தில் மர்மம் உள்ளது என அவரது தந்தையும், விஷ்ணுபிரியாவின் தோழியும் சந்தேகம் கிளப்பிய நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையில் ஏடிஎஸ்பி ஸ்டாலின், டிஎஸ்பி வேலன், ராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக சிபிசிஐடி வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘கோகுல்ராஜ் கொலை சம்பவத் துக்கு காரணமானவர்களின் நெருக் கடி, குடும்பம் மற்றும் தனிப் பட்ட காரணங்கள், உயர் அதிகாரி கள் நெருக்கடி ஆகிய மூன்று கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. நாமக்கல் எஸ்பி செந் தில்குமார், டிஎஸ்பி ராஜூ, இன்ஸ் பெக்டர் ராஜூ, விஷ்ணுபிரியா பணிபுரிந்த எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் பணியாற்று பவர்கள், அவரது வாகன ஓட்டுநர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது. அதே போல் கடலூரில் உள்ள விஷ்ணு பிரியாவின் பெற்றோர், உறவினர், தோழிகள் ஆகியோரிடம் விசா ரணை நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, விஷ்ணுபிரியா 2 செல்போன்கள், ஒரு லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றை பயன் படுத்தியுள்ளார். இவற்றின் மூலம் அவருடன் தொடர்புகொண்ட வர்கள் யார், யார் என்பதையும், அவர் யாரிடம் பேசியுள்ளார் என்பதையும் தனிப்பிரிவு ஆய்வு செய்து வருகிறது. அதிக நேரம் பேசிய எண்களை வைத்திருப்போர் தனி வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்படு கிறது. ஏற்கெனவே விசாரணை நடத்தியவர்கள் தெரிவித்த தகவ லுக்கும், மொபைல் போன் பேச்சு குறித்த ஆதார தகவலுக்கும் முரண்பாடு உள்ளதா என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். தற்கொலைக்கான புதிரை அவ ரது தொலைபேசி அழைப்புகள் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கி றோம் ’ என்றனர்.