

மெட்ரோ ரயில் நிர்வாகம் நிலுவைத்தொகை தராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
பல கோடி நிலுவைத் தொகையை தர வேண்டி சென்னை மெட்ரோ ரயில் அலுவலகம் முன்பு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தை அடுத்து உரிமையாளர்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், நிலுவைத்தொகையை வழங்காமல் இருந்தால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.