

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகேயுள்ள வேந்தன்பட்டியில் பெரியாண்டியம்மன் கோயில் திருவிழாவுக்காக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர் நேற்று வந்துள்ளனர். இவர்கள், மாயனூர்-சிட்டாபுத்தூர் புதுப் பாலத்துக்கு அடியில் காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது 3 பேர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதில் நாமக்கல் கணேஷ் புரத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் காஸ்டல்(18), அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (27), கூலி தொழிலாளி சேதுபதி (19) ஆகியோரது சடலங்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
இதேபோல, கம்பரசம் பேட்டை தடுப்பணையில் குளித்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா கான்(20), என்பவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.