தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை: திண்டுக்கல்லில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை: திண்டுக்கல்லில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Updated on
1 min read

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஆளும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

‘நமக்கு நாமே’ திட்டத்தின் ஒருபகுதியாக மு.க. ஸ்டாலின் , திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். வத்தலகுண் டில் மார்க்கெட் பகுதியில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

அப்போது பெண்கள் சிலர், விவசாயத்தை நம்பி வாழ்கிறோம். ஆனால், அருகிலுள்ள கண் மாய்க்கு தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆகின்றன. வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட வில்லை. இதனால், விவசாயத் துக்கு மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினர் யாரும் குறை களைக் கேட்க வருவதில்லை எனத் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், சட்டப்பேரவையில் அமைச்சர்கள் செய்ய முடியாதவற்றை வாக்குறுதிகளாக கூறி வருகின் றனர். மின்துறை மானியக் கோரிக்கையில் மின்தடையே இல்லை என்கிறார் அமைச்சர் விஸ்வநாதன். அவர் வீட்டில் வேண்டுமானால் மின்தடை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாட்டில் உள்ளது. முதல்வர் குடிநீர் தட்டுப்பாடே இல்லை என்கிறார். ஆனால், நீங்கள் குடிநீர் தட்டுப்பாடு பற்றி கூறுகிறீர்கள். இதற்கு ஒரு மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து சின்னாளபட்டியில் ஸ்டாலின் பேசுகையில், தமிழகத் தில் ஆட்சி நடக்கவில்லை. தேர் தலில் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.

சட்டப்பேரவையில் மதுவிலக்கு இல்லை என அமைச்சர் கூறுகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு கொண்டு வரப் படும் என கருணாநிதி அறிவித் துள்ளார். மக்களிடம் மாற்றம் தெரிகிறது. அந்த நம்பிக்கையில் சொல்கிறேன். அடுத்து திமுக ஆட்சிதான். எங்களைவிட மக்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கின் றனர் என்றார். தொடர்ந்து பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், திண்டுக்கல்லில் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in