சாலை விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

ஈரோடு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப். 4) வெளியிட்ட அறிக்கை:

"ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், இலக்காபுரம் கிராமம், புதுவலசு என்னுமிடத்தில் நேற்று (செப். 3) சிவகிரியிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் மோதிய விபத்தில், குளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் மோகம்புரி, அவருடைய மனைவி பொங்கி அம்மாள், சின்னசாமி என்பவரின் மகன் பாலசுப்ரமணி மற்றும் பொன்னுசாமி என்பவரின் மனைவி பார்த்தாள் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட சாலை விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட சாலை விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in