அரசு நூலகங்களில் வாசிப்பதற்கு நாளிதழ்கள் இல்லை; வாசகர்கள் ஏமாற்றம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அரசு நூலகங்களில் வாசிப்புக்காக தினசரி நாளிதழ்களை வாங்கி வைக்க வேண்டும் என வாசகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் தமிழகத்தில் அரசு நூலகங்கள் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு பின்னர் செப்.1-ம் தேதி நூலகங்கள் திறக்கப்பட்டன. மறு உத்தரவுவரும் வரை தினசரி நாளிதழ்களை வாங்க வேண்டாம் எனநூலகர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தினசரி நாளிதழ்கள், பருவ நாளிதழ்கள் வாசிப்புக்கு வைக்கப்படவில்லை.

நூலகத்தில் இவற்றை வாசிப்பதற்கென வாசகர்கள் வட்டம் அதிகமுள்ள நிலையில் தினசரி நாளிதழ்களை படிக்க நூலகம் வந்த வாசகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து வாசகர்கள் கூறும்போது, ‘‘தினசரி நாளிதழ்கள் வாழ்வில் ஒன்றிணைந்தவை. தினமும் வாசிப்பு பழக்கம் உள்ளதால், காலையிலேயே நூலகத்துக்கு வந்துவிடுவோம். தற்போது கரோனா காரணமாக நாளிதழ்களை வாங்கி வைக்காததால் ஏமாற்றமடைந்தோம். பாதுகாப்புடன் வாசிக்க ஏதுவாகநூலகங்களில் தினசரி நாளிதழ்கள் வாங்க அரசு உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து நூலக அதிகாரிகள் கூறும்போது, தற்போது கரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவல் நூலை எடுத்துச்சென்றவர்கள், மீண்டும் அதை கொண்டு வரும் போது, ஒரு தனி அறையில் வைக்கச்சொல்லி விடுவோம். பின்னர் மாலையில் சானிடைசர், கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்த பின்னர் அலமாரிக்கு கொண்டு செல்கிறோம்.

சொந்த நூல்களை கொண்டு வந்து வாசிக்கும் பழக்கம் உள்ள மாணவ, மாணவிகளுக்கு தனியாகஇடம் ஒதுக்கி சமூக இடைவெளியுடன் படிக்க வழி செய்துள்ளோம். குறிப்பு உதவிகளுக்காக எடுக்கும் நூல்களையும் தனியாக வைத்து, கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துகிறோம்.

நூலக வாயிலில் வெப்பமானி மூலம் வாசகர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கிறோம். கைகளை நன்றாக சோப்புத் திரவம் மூலம் கழுவிய பின்னரே நூலகத்துக்குள் அனுமதிக் கிறோம். நாளிதழ்கள் வாங்குவது தொடர்பாக அரசின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றனர். தினமும் வாசிப்பு பழக்கம் உள்ளதால், காலையிலேயே நூலகத்துக்கு வந்துவிடு வோம். தற்போது கரோனா காரணமாக நாளிதழ்களை வாங்கி வைக்காததால் ஏமாற்றமடைந்தோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in