அம்பத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மகன் தூக்கிட்டு தற்கொலை

அம்பத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மகன் தூக்கிட்டு தற்கொலை
Updated on
1 min read

அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 11-வது தெருவைச் சேர்ந்தவர் வேதாச்சலம். இவர், 2011 முதல் 2016 வரை அம்பத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக இருந்துள்ளார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவரது 3-வது மகன் ஹரிகிருஷ்ணன்(39). இவரது மனைவி சர்மிளாதேவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு சர்மிளாதேவி, இரு மகன்களுடன் கொளத்தூரில் உள்ள தனதுபெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர், ஹரிகிருஷ்ணன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலைஹரிகிருஷ்ணன் அவரது படுக்கை அறையில் இருந்து வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வேதாச்சலம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஹரிகிருஷ்ணன் படுக்கை அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்கு மாட்டி சடலமாக தொங்கியுள்ளார்.

தகவல் அறிந்து வந்த கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in