

இந்தியாவில் உள்ள 53 மாநகரங்களில் மட்டும் 2019-ல் 22,390தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில் சென்னையில் அதிக அளவில் தற்கொலைகள் நடந்துள்ளன. சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு2,461 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. நாட்டில் நடந்த மொத்த தற்கொலைகளில் சென்னையில் மட்டும் 11% நடந்துள்ளது.
டெல்லியில் 2,423 பேரும், பெங்களூருவில் 2,081 பேரும், மும்பையில்1,229 பேரும், சூரத்தில் 795 பேரும்தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் கோயம்புத்தூரில் 338, மதுரையில் 345, திருச்சியில் 188 என தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரத்தில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.