

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். ராமநாதபுரம், பூக்கடை துணை ஆணையர், எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
அதிகாரிகள் மாற்றம் குறித்த விவரம்:
1.திருப்பூர் மாவட்ட தலைமையிடத் துணை ஆணையராகப் பதவி வகித்த செல்வகுமார், வேலூர் எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
2. வேலூர் எஸ்.பி. பிரவேஷ்குமார், சென்னை ரயில்வே எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
3. சென்னை ரயில்வே எஸ்.பி. மஹேஷ்வரன், சென்னை பூக்கடை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
4. சென்னை பூக்கடை துணை ஆணையர் கார்த்திக், ராமநாதபுரம் எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.