சட்டப்பேரவைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு: மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதி

சட்டப்பேரவைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு: மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதி
Updated on
1 min read

தென்மாவட்டங்களில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளதால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக போட்டியிடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அக் கட்சியின் மண்டல பொறுப்பாளர் நயினார்நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் 11 மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மண்டல பொறுப்பாளர் நயினார்நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் சட்டப்பேரவை தேர்தலில் சிறப்பான வெற்றிக்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், கூட்டணியில் போட்டியிட்டாலும் வெற்றிவாய்ப்பைப் பெறுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

தென்மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. அங்கு என்னைவிட மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். கட்சி தலைமை உத்தரவிட்டால் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர் மகாராஜன், மாநில செயலாளர் உமாரதி, மாவட்ட பார்வையாளர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in