நெல்லை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியது

நெல்லை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியது
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5393 ஆக இருந்தது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக மட்டுமே இருந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்தில் பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 4 மடங்காகவும் உயர்ந்திருக்கிறது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 163 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 9959 ஆகியது.

இவர்களில் 8490 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 104 பேர் குணமடைந்துள்ளனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 1289 பேர் தற்போது சிகிச்சை பெறுகிறார்கள். நேற்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in