மெட்ரோ ரயில் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் எது?- ஆலோசனை கூட்டத்தில் 9 நிறுவனங்கள் பங்கேற்பு

மெட்ரோ ரயில் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் எது?- ஆலோசனை கூட்டத்தில் 9 நிறுவனங்கள் பங்கேற்பு
Updated on
1 min read

சைதாப்பேட்டையில் இருந்து மே தின பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை மேற் கொள்ள டெண்டருக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் கோயம்பேட்டில் நடை பெற்றது. இதில் 9 நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் 2 வழித்தடங் களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதில் மே தின பூங்காவில் இருந்து சைதாப் பேட்டை வரையிலான பணிகளை மேற்கொண்ட `கேமின்’ நிறுவனம் திடீரென வெளியேற்றப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால், சைதாப் பேட்டை மே தின பூங்கா வரையில் சுரங்கம் தோண்டுவது, ரயில் நிலையங்கள் அமைப்பது ஆகிய பணிகள் நிறுத்தப்பட்டுள் ளன. இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள புதிய நிறுவனத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் தேர்வு செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது, `‘காலதாமதம் ஏற்படு வதை தடுக்கும் வகையில் சைதாப் பேட்டை மே தினப்பூங்காவில் பணிகளை மேற்கொள்ள மீண்டும் புதிய டெண்டர் வெளியிடப்பட் டுள்ளது. இதற்கிடையே, கோயம் பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் டெண் டருக்கு முந்தைய கூட்டம் நடை பெற்றது. இதில், எல்&டி, அப்கான்ஸ், எச்சிசி உட்பட மொத்தம் 9 நிறுவனங்களின் நிர் வாகிகள் கலந்து கொண்டனர். இத் திட்டப்பணிகள் குறித்து முழுமை யான தகவல்களை அவர்கள் திரட்டி சென்றுள்ளனர். டெண்டர் மூலம் புதிய நிறுவனத்தை தேர்வு செய்து விரைவில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in